Monday, February 4, 2013

கொய் தியாவ் கோரேங்

வெற்றிகரமாக இன்றைக்கு ஒரு மலேசிய வகை உணவு தயாரித்தேன். இதன் பெயர் Keow Teow goreng (கொய் தியாவ் கோரேங்)  

Inline image 1

கொய் தியாவ் என்பது ஒரு நூடல் வகை. இது அடிப்படையில் ஒரு சீன உணவு. இதனை பாஸ்டா போல நீரை கொதிக்க வைத்து அதில் போட்டு மெண்மையாக்கி சமைக்க வேண்டும். ஆனால் நான் இன்று பகிர்ந்து கொள்வது மலாய் வகைப்படுத்தப்பட்ட கொய் தியாவ். இப்படி மலாய்காரர்களும் மலேசியாவில் வாழும் வேறு இனத்தவர்களும் மலேசியாவில் செய்து சாப்பிடுவோம். இன்றைக்கு மதிய உணவு என் வீட்டில் கொய் தியாவ் கோரெங் தான்.

சரி செய்முறையை பார்ப்போம்

தேவையான பொருட்கள்
  • வெங்காயம் 1
  • வெங்காயத்தாள்
  • lemon grass - 1
  • தக்காளி 2
  • தோஃபூ 1
  • bean sprout - ஒரு கிண்ணம் நிறைய
  • கெட்டியான சோயா சாஸ்
  • மிளகாய் 1 அல்லது 2
  • உப்பு தேவையான் அளவு
  • கொய்தியாவ் நூடல்- முக்கால் பாக்கெட்
Inline image 2

Inline image 3

Inline image 4

செய்முறை

முதலில் கொய்தியாவ் நூடலை நீரை கொதிக்க வைத்து அதில் போட்டு மூன்று நிமிடங்களில் அது மெண்மையானதும் எடுத்து குளிர்ந்த  நீரில் காட்டி தனியாக வைக்கவும்.

ஃப்ரையிங் பேனில் எண்ணெய் விட்டு முதலில் தோஃபூவை சிறு துண்டுகளாக வெட்டி அதில் வாட்டி எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்

அதே பேனில் மேலும் கொஞ்சம் எண்ணெய் விட்டு அதில் lemon grass , நறுக்கிய வெங்காயம், வெங்காயத்தாளின் அடிப்பகுதி ஆகியவற்றைப் போட்டு கொஞ்சம் வதக்கவும்

பின்னர் நறுக்கி வைத்துள்ள தக்காளிகளைச் சேர்த்து அதில் 2 ஸ்பூன் சோயா சோஸ் மிளகாய் சேர்த்து கிளறி விட்டு வைக்கவும். 5 நிமிடங்களில் இந்தக் கலவை தயாராகிவிடும். இதில் உப்பும் சேர்த்து நன்கு கிளறிவிடவும்.

இதில் கொய்தியாவை போட்டுக் கிளறவும். 3 நிமிடத்திற்குப் பின்னர் bean sprout அதன் மேல் போட்டு மேலும் கிளறவும். 

Inline image 5

வெங்காயத்தாளின் இலைப்பகுதியை சிறிதாக நறுக்கி இறுதியில் இந்தக்  கலவையில் சேர்த்து கலந்து விடவும்.

2 நிமிடத்தில் உணவு தயாராகி விடும்.

Inline image 6
இதனை தட்டில் பரிமாறி சோப் ஸ்டிக் கொண்டு சாப்பிட்டு மகிழலாம்.

செய்து பாருங்கள். மிக எளிமை. 30 நிமிடத்திற்குள் செய்யக்கூடிய உணவு இது.

எத்தனை பேர் செய்து பார்த்தீர்கள் என்று எனக்கு தகவல் அனுப்பி வைத்தாலும் மகிழ்வேன்.


அன்புடன்
சுபா