பேராக் மாநிலத்தின் பேராக் அருங்காட்சியகம் மலேசியாவின் முதல் அருங்காட்சியகம் என அறியப்படுவது. இன்று காலை இந்த அருங்காட்சியகத்தின் பழங்குடி இன மக்கள் தொடர்பான தகவல்களைக் காண முடிந்தது.
மலேசியத் தமிழர் வரலாற்று ஆவணப்படுத்தல் தொடர்பான சீரிய கலந்துரையாடலுக்குப் பிறகு பினாங்கு மாநில துணை முதலமைச்சர் மாண்புமிகு பேரா.முனைவர்.ராமசாமி அவர்களுடனும் பினாங்கு இந்து அறநிலையத்துறை செயலவையினருடனும் மதிய உணவு விருந்து.
பினாங்கு மாநில துணை முதலமைச்சர் மாண்புமிகு பேரா.முனைவர்.ராமசாமி அவர்களுடன் இன்று காலை ஒரு சந்திப்பு. இந்து அறநிலையத்துறையினர் இந்த சந்திப்பில் இணைந்து கொண்டனர்.