Thursday, October 18, 2018

பினாங்கு அறநிலையத்துறை அழைப்பு - 5

மலேசியத் தமிழர் வரலாற்று ஆவணப்படுத்தல் தொடர்பான சீரிய கலந்துரையாடலுக்குப் பிறகு பினாங்கு மாநில துணை முதலமைச்சர் மாண்புமிகு பேரா.முனைவர்.ராமசாமி அவர்களுடனும் பினாங்கு இந்து அறநிலையத்துறை செயலவையினருடனும் மதிய உணவு விருந்து.











பினாங்கு அறநிலையத்துறை அழைப்பு - 4

பினாங்கு மாநில துணை முதலமைச்சர் மாண்புமிகு பேரா.முனைவர்.ராமசாமி அவர்களுடன் இன்று காலை ஒரு சந்திப்பு. இந்து அறநிலையத்துறையினர் இந்த சந்திப்பில் இணைந்து கொண்டனர்.



பினாங்கு அறநிலையத்துறை அழைப்பு - 3

நான் பிறந்து, கல்வி கற்று, வளர்ந்த பினாங்கு மாநிலம். George town என்பது இதன் தலைநகர். துறைமுகப்பகுதி. இன்றைய காலை காட்சி.





பினாங்கு அறநிலையத்துறை அழைப்பு - 2


பினாங்கில் தமிழர்கள் ஒரு புறம் நவராத்திரி கொண்டாடிக் கொண்டிருக்க, சீனர்களும் தங்கள் பாணியில் நவராத்திரியை 9 நாள் பண்டிகையாக இங்கு கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். மூலைக்கு மூலை சீன சாமி கோயில்களில் பூக்கள்,ஊதுபத்தி புகை என விழாக்கோலமாக பினாங்கு காட்சியளிக்கிறது.

இரவு 10:30 வாக்கில் நான் விமான நிலயத்திலிருந்து ஜியோர்ஜ்டவுன் பகுதிக்கு வந்தபோது சீனர்களின் தேர் பவனி சென்று கொண்டிருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் சீனர்களின் இந்த பெண் தெய்வத்திற்கான நவராத்திரி விழா பினாங்கில் விமரிசையாக வளர்ந்திருப்பதைக் காண்கிறேன்.
-சுபா

பினாங்கு அறநிலையத்துறை அழைப்பு - 1

Arrived Penang Island - the Pearl of Orient 
பினாங்கு - ஜியோர்ஜ் டவுன் பகுதி.





Thursday, February 12, 2015

குழந்தை இலக்கியம் - முனைவர்.முரசு நெடுமாறன் முயற்சிகள்

அண்மையில் எனது மலேசிய பயணத்தின் போது எனது நெடுநாள் நண்பரான பெரியவர் முனைவர்.முரசு நெடுமாறன் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு மீண்டும் ஏற்பட்டது. இவரது புதல்வன் முத்து நெடுமாறன் அவர்களையும் உத்தமம் தொடங்கிய நால் முதல் நட்புடன் தொடர்பில் இருப்பவர். ஆயினும் இம்முறை மலேசிய பயணத்தில் திரு. முத்து நெடுமாறனைக் காண வாய்ப்பமையவில்லை என்ற போதிலும் அவரது தந்தையாருடன் பல வேளைகளில் உரையாடும் சந்தர்ப்பம் கிட்டியது.

முனைவர்.முரசு நெடுமாறன் அவர்கள் குழந்தை இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு  இத்துறையில் குழந்தைகளுக்கான நூல்களையும் சிடிக்களையும் உருவாக்கி வருகின்றார். தானே பாடல்களை எழுதி அதற்கு இசை கூட்டி மலேசிய உள்ளூர் பாடகர்களைக் கொண்டு பாட வைத்து கணிணியில் போட்டு குழந்தைகள் கேட்டு பாடலைப் பாடி தமிழ் கற்றுக் கொள்ளும் வகையில் சிறந்த முயற்சியில் தொடர்ந்து பல்லாண்டுகளாக ஈடுபட்டு வருகின்றார்.

இவரது அயராத முயற்சி போற்றுதலுக்குறியது. விரையில் குழந்தை இலக்கியம் தமிழில் என்ற வகையில் ஒரு கருத்தரங்கையும் எற்பாடு செய்ய நினைத்து அதன் ஆயத்த பணிகளிலும் ஈடுபட்டுள்ளார். குழந்தைகளுக்கான பாடல்கள் எனும் போது குழந்தைகளின் உச்சரிப்பு, உதட்டசைவுகள் என்ற விஷயங்களையும் கவனத்தில் கொண்டு இவர் சொற்களை சேர்த்து பாடல்களை எழுதுவதாக எனக்கு தெரிவித்தார்.

உலகத் தமிழாராய்ச்சி மானாடு முடிந்து மீண்டும் நண்பர்கள் எனக்கு விருந்து நிகழ்ச்சி ஒன்ற ஏற்பாடு கிள்ளான் நகரில் செய்திருந்தனர். அங்கே இவரை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு அமைந்த போது அவரது 2 நூல்களை எனக்கு வழங்கி அவற்றை இணைய வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைக்க கேட்டுக் கொண்டார்.


​

முனைவர்.முரசு நெடுமாறன் அவர்களின் முயற்சிகள் காலத்திற்கேற்றவை. இவரது பணி தொடரவும் மேலும் ஆர்வமுள்ளோர் இத்துறையில் இவருடன் இணைந்து பங்காற்றவும் தமிழ் மரபு அறக்கட்டளை வழியாக கேட்டுக் கொள்கின்றேன்.

அன்புடன்
சுபா

Wednesday, February 11, 2015

மலேசிய தமிழ்ச்சங்கம்

மலேசியாவில் நான் இருந்த இறுதி நாளில் தற்செயலாக ஒரு இலக்கிய நிகழ்வில் கலந்து கொள்ள அழைப்பு வந்திருந்தது. மலேசிய தமிழ்ச் சங்கம்.. கடந்த 15 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் தமிழ் பண்பாட்டு இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தி வரும் ஒரு கழகம் இது.

தமிழ்வேள் கோ.சாரங்கபாணி அவர்கள் சுதந்திரத்திற்கு முன் மலாயாவில் தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்டவர். அவரது முயற்சியின் விளைவாக மலாயாவின் தோட்டப்புற மக்களின் கலை வளர்ச்சி நாடகம், ஆடல் பாடல் கலைகள் என்ற வகையில் எழுச்சி பெற்றன. அவர் உருவாக்கிய தமிழர் திருநாளை மலேசிய மக்கள்  மறந்து விடாமல்  இருக்க இந்த மலேசிய தமிழ்ச்சங்கம் ஆண்டு தோறும் கலை நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றது.

அந்த வகையில் இந்த ஆண்டும் இந்த நிகழ்ச்சி 8.2.2015ம் நாள் ஏற்பாடாகியிருந்தது. இந்த நிகழ்வில் சிறப்புறையாற்ற தமிழகத்தின் பேச்சாளர் பேராசிரியை பர்வீன் சுல்தானா அவர்களும் வந்திருந்தார்கள்.

அந்த நிகழ்வில் வந்து கலந்து கொள்ள வேண்டும் என்ற அன்பு வேண்டுகோளை மலேசிய நாட்டின் புகழ்பெற்ற சமூகச் சேவையாளர், இந்த சங்கத்தின் புரவலர்  சகோதரர் சாமுவேல் ராஜ் அவர்கள் எனக்கு நிகழ்ச்சியின் முதல் மாலை மாலை தெரிவித்தார்.  நான் விமான நிலையம் செல்வதற்கு முன்னர் 1 மணி நேரம் வந்து சென்றால் போதும் என்ற அவரது அழைப்பை ஏற்று நிகழ்ச்சிக்குச் சென்று வாழ்த்துரையும் வழங்கினேன்.

எதிர்பாராத வகையில் என்னை பாராட்டி கேடயமும் மாலை பொன்னாடைகளும் என வழங்கி சிறப்பு செய்து மகிழ்ச்சியில் ஆழ்த்தினர் ஏற்பாட்டுக் குழுவினர். அவர்களின் அன்பிற்கு நான் கடமை பெற்றிருக்கின்றேன்.

இந்த நிகழ்விற்கு மலேசிய நிலநிதி கூட்டுறவு சங்க இயக்குனர். டத்தோ பா.சகாதேவன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சிக்கு மலேசிய சட்ட மன்ற உறுப்பினர் மாண்புமிகு காமாட்சி அவர்களும் வந்திருந்தார். சில புகைப்படங்கள்  ...




டத்தின் டாக்டர்.சுப்ரமணியம், நான்,  மலேசிய சட்ட மன்ற உறுப்பினர் மாண்புமிகு காமாட்சி , பேராசிரியை பர்வீன் சுல்தானா


​

 டத்தோ பா.சகாதேவன் எனக்கு நினைவுச் சின்னம் வழங்குகின்றார்


​சிறப்பு பிரமுகர்களுடன்
​

​மலேசிய உள்ளூர் இசைக்கலைஞர்கள் பாடல் பாடுகின்றனர்


​பரத நாட்டியம் ஆடும் மலேசிய இளம் நங்கையர்கள்

சுபா