Wednesday, February 11, 2015

மலேசிய தமிழ்ச்சங்கம்

மலேசியாவில் நான் இருந்த இறுதி நாளில் தற்செயலாக ஒரு இலக்கிய நிகழ்வில் கலந்து கொள்ள அழைப்பு வந்திருந்தது. மலேசிய தமிழ்ச் சங்கம்.. கடந்த 15 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் தமிழ் பண்பாட்டு இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தி வரும் ஒரு கழகம் இது.

தமிழ்வேள் கோ.சாரங்கபாணி அவர்கள் சுதந்திரத்திற்கு முன் மலாயாவில் தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்டவர். அவரது முயற்சியின் விளைவாக மலாயாவின் தோட்டப்புற மக்களின் கலை வளர்ச்சி நாடகம், ஆடல் பாடல் கலைகள் என்ற வகையில் எழுச்சி பெற்றன. அவர் உருவாக்கிய தமிழர் திருநாளை மலேசிய மக்கள்  மறந்து விடாமல்  இருக்க இந்த மலேசிய தமிழ்ச்சங்கம் ஆண்டு தோறும் கலை நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றது.

அந்த வகையில் இந்த ஆண்டும் இந்த நிகழ்ச்சி 8.2.2015ம் நாள் ஏற்பாடாகியிருந்தது. இந்த நிகழ்வில் சிறப்புறையாற்ற தமிழகத்தின் பேச்சாளர் பேராசிரியை பர்வீன் சுல்தானா அவர்களும் வந்திருந்தார்கள்.

அந்த நிகழ்வில் வந்து கலந்து கொள்ள வேண்டும் என்ற அன்பு வேண்டுகோளை மலேசிய நாட்டின் புகழ்பெற்ற சமூகச் சேவையாளர், இந்த சங்கத்தின் புரவலர்  சகோதரர் சாமுவேல் ராஜ் அவர்கள் எனக்கு நிகழ்ச்சியின் முதல் மாலை மாலை தெரிவித்தார்.  நான் விமான நிலையம் செல்வதற்கு முன்னர் 1 மணி நேரம் வந்து சென்றால் போதும் என்ற அவரது அழைப்பை ஏற்று நிகழ்ச்சிக்குச் சென்று வாழ்த்துரையும் வழங்கினேன்.

எதிர்பாராத வகையில் என்னை பாராட்டி கேடயமும் மாலை பொன்னாடைகளும் என வழங்கி சிறப்பு செய்து மகிழ்ச்சியில் ஆழ்த்தினர் ஏற்பாட்டுக் குழுவினர். அவர்களின் அன்பிற்கு நான் கடமை பெற்றிருக்கின்றேன்.

இந்த நிகழ்விற்கு மலேசிய நிலநிதி கூட்டுறவு சங்க இயக்குனர். டத்தோ பா.சகாதேவன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சிக்கு மலேசிய சட்ட மன்ற உறுப்பினர் மாண்புமிகு காமாட்சி அவர்களும் வந்திருந்தார். சில புகைப்படங்கள்  ...




டத்தின் டாக்டர்.சுப்ரமணியம், நான்,  மலேசிய சட்ட மன்ற உறுப்பினர் மாண்புமிகு காமாட்சி , பேராசிரியை பர்வீன் சுல்தானா



 டத்தோ பா.சகாதேவன் எனக்கு நினைவுச் சின்னம் வழங்குகின்றார்


​சிறப்பு பிரமுகர்களுடன்

​மலேசிய உள்ளூர் இசைக்கலைஞர்கள் பாடல் பாடுகின்றனர்


​பரத நாட்டியம் ஆடும் மலேசிய இளம் நங்கையர்கள்

சுபா

1 comment:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
நிகழ்வு சிறப்பாக நடைபெற்றமைக்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Post a Comment