4ம் தேதி புதன்கிழமை, அதாவது தைப்பூசம் முடிந்த மறுநாள் பினாங்கில் நகரத்தார் முருகன் கோயிலுக்கு 2 நாட்களுக்கு முன் வந்த வெள்ளி ரதம் மாரியம்மன் ஆலயத்திற்குச் திரும்பிச் செல்லும் நாள். அன்று காலையில் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் மட்டும் நகரத்தார் முருகன் கோயிலிலிருந்து குழுவாகப் புறப்பட்டு ஆடிக் கொண்டே வாட்டர்பால் வீரபத்ரன் ஆலயம் வரை நாதஸ்வர இசைக்குழுவினர் முன் செல்ல 83 மயில்காவடிகளை வரிசையாக எடுத்துக் கொண்டு சென்றனர். பின்னர் மீண்டும் நகரத்தார் கோயிலுக்கே வந்து சேர்ந்தனர். காலை 7 முதல் 8.30 வரை இந்த சிறப்பு நிகழ்வு நடந்தது.
1 comment:
வணக்கம்
அருமையாக படம்பிடித்து காட்டியுள்ளீர்கள் நானும் அந்த ஆலயத்தில்தான் நின்றேன் தைப்பூச நிகழ்வுக்கு.. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Post a Comment