Saturday, February 7, 2015

பினாங்கு தைப்பூசம் - 6

நாட்டுக் கோட்டை செட்டியார்களின் காவடி தனிச் சிறப்புடன் அமைக்கப்பட்டிருக்கின்றது. இரு புறமும் மயில் இறகு கட்டப்பட்டு இருப்பதுடன் இரண்டு பக்கமும் சிறு செம்புகள் துனியால் கட்டப்பட்டிருக்கின்றன. ஒரு குடத்தை காவடி எடுத்தவர் அவிழ்க்கும் போது பார்த்தேன். காவடி எடுத்தவர் குடத்தில் இருக்கும் பொருளை தட்டில் கொட்டி வைத்தார். குடும்பத்தார் காவடி எடுத்தவர்களை சூழ்ந்து கொள்ள அவர்கள் செம்புகளைக் கழற்றி அதன் உள்ளிருக்கும் பொருளை தட்டில் வைக்கின்றன்ர். தினைமாவாக இருக்குமோ என நான் நினைக்கின்றேன். இது தொடர்பாக தகவல் அறிந்தவர்கள் உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

சில படங்கள்.




2 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அழகிய படங்களுடன் பதிவை அசத்தி விட்டீர்கள் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Inbachudar Muthuchandran said...

நன்றி,வாழ்த்துகள்

Post a Comment