மலாய் காலை உணவு பலகாரங்கள்
படத்தில் நாம் காண்பது மலேசிய நாட்டில் காலை உணவில் இடம் பெறும் பலகாரங்களில் சில வகை.
Kuih Muih என்பது மலாய் மொழியில் பலகாரங்களைக் குறிப்பிடச் சொல்லப்படும் சொல். மலேசிய காலைப் பலகாரங்கள் கண்களைக் கவரும் வர்ணங்களினாலானவை என்பது மட்டுமல்லாமல் சுவையில் அபாரமானவை. கரிப்பாப், குவே லாப்பீஸ், பேங்காங், நாசி லெமாக், புரு மயோங், என ஒரு நீள பட்டியலே இடலாம்.
ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனிச் சுவை கொண்டவை.
பெரும்பாலும் மலேசிய பலகாரங்களான இவை காலை உணவிலும் மாலை நேர தேனீர் மேசையிலும் இடம்பெறுபவை. பெறும்பாலானவை கோதுமை மாவு, மரவள்ளிக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு மாவு, சர்க்கரை, தேங்காய், அரிசி என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டவை.
சுபா
1 comment:
குவே லாப்பீஸ்,// என்பது பச்சை மற்றும் சிவப்பு வண்ணத்தில் இருப்பதா> அதற்கு ஆங்கில பெயர் என்ன??
Post a Comment