மலாக்கா நகர ரிக்ஷா வண்டி
மலேசியாவின் வரலாற்று சிறப்பு மிக்க நகரங்களில் மலாக்கா முதல் இடம் பெறுவது. இங்கு போர்த்துக்கீஸியர்கள் காலத்து கட்டிடங்களும் மலாக்கா ஆறும் அதனை ஒட்டி அமைந்த வரிசையான கட்டிடங்களும் சுற்றுப்பயணிகளின் கவனத்தை ஈர்ப்பன. சுற்றுப்பயணிகள் அமர்ந்து நகரை வலம் வர உதவும் வகையில் நகரின் மையப் பகுதியில் ரிக்ஷாக்கள் இயங்குகின்றன. இந்த ரிக்ஷா வண்டிகளை அலங்கரித்திருக்கும் விதம் நம் கவனத்தை ஈர்க்கத் தவறுவதில்லை. ப்ளாஸ்டிக் மலர்களையும் அலங்காரப் பொருட்களையும் கொண்டு ரிக்ஷா வண்டிக் காரர்கள் தங்கல் வண்டிகளை தங்கள் விருப்பத்திற்கேற்ப வடிவமைத்திருப்பர். இங்கு நாம் இப்படத்தில் காண்பதும் அத்தகைய ஒரு ரிக்ஷா வண்டி தான்.
சுபா

No comments:
Post a Comment