மலேசியக் குரங்குகள்
ஆசிய நாடுகள் பலவற்றிலும் குரங்குகள் காடுகளில் திரிவதை பலரும் பார்த்திருக்கின்றோம். மலேசிய குரங்குகளுக்கு என்ன தனிச் சிறப்பு என்று கேட்க வேண்டாம். மலேசியாவில் இந்தப் புகைப்படம் எடுத்ததால் இது மலேசியக் குரங்கு. அவ்வளவே. :-)
இது பத்து மலை கோயில் கீழ் பகுதியில் பதிவு செய்யப்பட்ட படம். தூங்கும் தன் குட்டியை ஒரு கையால் அரவணைத்துக் கொண்டு எதையோ பார்க்கும் பார்வை அழகு. குரங்குக் குட்டியின் தலை மயிர் சிறு மனித குழந்தையின் தலைமயிரை ஒத்ததாகவே எனக்குத் தெரிகின்றது. தாயின் அனைப்பில் கவலையின்றி தூங்கும் குட்டி தன் தூக்கத்திலும் கூட தன் தாயை இறுக்கி கட்டிக் கொண்டேதான் இருக்கும்.
மலைப்பகுதிகளில் அமைந்திருக்கும் கோயில்களில் காணப்படும் குரங்குகளுக்கு பக்தர்கள் நிச்சயம் தனக்கு ஏதாவது உணவுகளைக் கொடுப்பார்கள் என்று நன்கு தெரியும். வாழைப்பழம் தேங்காய், பாக்கு உலர்ந்த திராட்சை பழங்களை தேடிக் கொண்டு கோயிலில் பூஜை செய்து விட்டு வரும் பக்தர்களின் வருகைக்காக இவை கூட்டமாக காத்துக் கொண்டிருக்கும். சில நேரங்களில் நம் கைகளில் பழங்கள் தென்பட்டால் வந்து பிடிங்கிச் செல்லவும் இவை தயங்காது.
சுபா

No comments:
Post a Comment