கால் நடை வளர்ப்பு மலேசியாவின் பெரிய நகரங்கள் தவிர்த்து ஏனைய எல்லா பகுதிகளிலும் உண்டு. கோழிகள், வான்கோழிகள் வளர்ப்பதை மலேசிய கிராமப்புறங்களில் பரவலாகக் காணலாம். இளம் வயதில் வான் கோழிகளைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு மிகுந்த பயமாக இருக்கும். கடித்து விடும் என்று யாரோ சொல்ல அதுவே அப்போது மனதில் பதிந்து இருந்தது. கோழிகளைப் போலவே வான்கோழிகளுக்கும் மலேசியாவில் நல்ல வரவேற்பு இருக்கின்றது. அதிலும் குறிப்பாக பண்டிகை காலங்களில்.
இந்தப் படத்தை கேரித் தீவில் ஒரு கிராமத்தில் புகைப்படமாக்கினேன்.
No comments:
Post a Comment