பூமாலைகளின் வரிசை.
இந்தப்படம் ப்ரிக்ஃபீல்ட்ஸ் பகுதியில் எடுக்கப்பட்ட ஒன்று. மாலையில் அங்கு உலவிக் கொண்டிருந்த வேளை கோயில்களுக்கு முன்புறத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கடைகளில் விற்பனையாளர்கள் வகை வகையாகத் தயாரித்து தொங்க வைத்திருக்கும் பூமாலைகளை நன்கு பார்க்க முடியும். மலேசியாவில் சில ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்தோமென்றால் சாமந்திப் பூவிலும் ரோஜாவிலும் மல்லிகையிலும் என மட்டுமே உருவாக்கபப்டும் மாலைகளைப் பார்க்க முடியும். இன்றோ, தமது கற்பனைத் திறனைப் புகுத்தி மாலை கட்டுபவர்கள் விதம் விதமான வடிவங்களில் மலர்களையும் இலைகளையும் கொண்டு மாலைகள் தயாரிக்கின்றனர். மாலைகளில் பயன்படுத்தப்படுகின்ற மலர்களும் கூட ஆர்க்கிட், துளசி இலைகள், கர்னேஷன் மலர்கள் என்று பலதரப்பட்டவையாக இருக்கின்றன. மாலை கட்டும் பணிகளை தமிழர்களே செய்கின்றனர். என் அனுபவத்தில் சீனர்களோ மலாய் இனத்தவரோ மாலைகள் கட்டி விற்பனை செய்வதை மலேசியாவில் இதுவரை நான் பார்த்ததில்லை.
மாலைகள் ஹிந்து சமயத்தவர்கள் ஆலயத்திற்கும் வீட்டு விஷேஷங்களுக்கும் பயன் படுத்துவது என்பது ஒரு புறமிருக்க பல்லினமக்கள் வாழும் மலேசியாவில் மாலைகள் மற்ற இனத்தோராலும் பல்வேறு சடங்குகளிலும் வைபவங்களும் பயன்படுத்தப்படுகின்றன என்பதும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றே. புத்த மதத்தை பின்பற்றும் சீனர்கள் தங்கள் வீட்டு வழிபாட்டிற்கும் ஆலய வழிபாட்டிற்கும், மலாய் இனத்தோர் பொது நிகழ்ச்சியில் சிறப்பு வருகையாளர்களைக் கௌரவிக்க என்பதற்காகவும் மாலைகளை வாங்குகின்றனர். மாலைகள் மலேசிய சூழலில் மக்கள் வாழ்க்கையில் அழகு சேர்க்கும் அணிகலனாக இணைந்து விட்டது!.
மேலும் சில படங்கள்..
சுபா
2 comments:
காட்சியில் அறிமுகம் - 7 & 8, காணக் கிடைக்கலைங்களே??
பின்னர் இணைக்கலாம் என நினைத்திருந்ததில் மறந்து போய் விட்டேன். நினைவூட்டியமைக்கு நன்றி :-)
Post a Comment