அண்மையில் எனது மலேசிய பயணத்தின் போது எனது நெடுநாள் நண்பரான பெரியவர் முனைவர்.முரசு நெடுமாறன் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு மீண்டும் ஏற்பட்டது. இவரது புதல்வன் முத்து நெடுமாறன் அவர்களையும் உத்தமம் தொடங்கிய நால் முதல் நட்புடன் தொடர்பில் இருப்பவர். ஆயினும் இம்முறை மலேசிய பயணத்தில் திரு. முத்து நெடுமாறனைக் காண வாய்ப்பமையவில்லை என்ற போதிலும் அவரது தந்தையாருடன் பல வேளைகளில் உரையாடும் சந்தர்ப்பம் கிட்டியது.
முனைவர்.முரசு நெடுமாறன் அவர்கள் குழந்தை இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு இத்துறையில் குழந்தைகளுக்கான நூல்களையும் சிடிக்களையும் உருவாக்கி வருகின்றார். தானே பாடல்களை எழுதி அதற்கு இசை கூட்டி மலேசிய உள்ளூர் பாடகர்களைக் கொண்டு பாட வைத்து கணிணியில் போட்டு குழந்தைகள் கேட்டு பாடலைப் பாடி தமிழ் கற்றுக் கொள்ளும் வகையில் சிறந்த முயற்சியில் தொடர்ந்து பல்லாண்டுகளாக ஈடுபட்டு வருகின்றார்.
இவரது அயராத முயற்சி போற்றுதலுக்குறியது. விரையில் குழந்தை இலக்கியம் தமிழில் என்ற வகையில் ஒரு கருத்தரங்கையும் எற்பாடு செய்ய நினைத்து அதன் ஆயத்த பணிகளிலும் ஈடுபட்டுள்ளார். குழந்தைகளுக்கான பாடல்கள் எனும் போது குழந்தைகளின் உச்சரிப்பு, உதட்டசைவுகள் என்ற விஷயங்களையும் கவனத்தில் கொண்டு இவர் சொற்களை சேர்த்து பாடல்களை எழுதுவதாக எனக்கு தெரிவித்தார்.
உலகத் தமிழாராய்ச்சி மானாடு முடிந்து மீண்டும் நண்பர்கள் எனக்கு விருந்து நிகழ்ச்சி ஒன்ற ஏற்பாடு கிள்ளான் நகரில் செய்திருந்தனர். அங்கே இவரை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு அமைந்த போது அவரது 2 நூல்களை எனக்கு வழங்கி அவற்றை இணைய வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைக்க கேட்டுக் கொண்டார்.
முனைவர்.முரசு நெடுமாறன் அவர்களின் முயற்சிகள் காலத்திற்கேற்றவை. இவரது பணி தொடரவும் மேலும் ஆர்வமுள்ளோர் இத்துறையில் இவருடன் இணைந்து பங்காற்றவும் தமிழ் மரபு அறக்கட்டளை வழியாக கேட்டுக் கொள்கின்றேன்.
அன்புடன்
சுபா

1 comment:
வணக்கம்
இப்படியான நிகழ்வுகள் மறக்கமுடியாது... நிகழ்வை பகிர்ந்தமைக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Post a Comment