Saturday, September 10, 2011

மலேசியா - பழைய செய்தி புதிய பதிவு 17

பெர்லிஸ் - மீண்டும் சந்திப்போம் (Perlis - Jumpa Lagi)



பெர்லிஸ் ஒரு சிறிய மானிலம் தான். ஆனாலும் இப்பகுதியின் வரலாறு மிகச் சுவரசியமானது. தொடர்ந்து ஆராயப்பட வேண்டியது.

மலேசியாவிற்குச் சுற்றுப் பயணம் செல்பவர்களின் பட்டியலில் பெர்லிஸின் பெயர் நிச்சயமாக இருக்காது என்பதை மலேசியரான நான் அறிவேன். வானளாவி உயர்ந்து நிற்கும் கட்டிடங்களையும் வணிக நிறுவனங்களையும் கேளிக்கை விடுதிகளையும், விதம் விதமான உணவுக் கடைகளையும் விரும்புபவர்களுக்கு ஏனைய மானிலங்கள் ஏராளமான வாய்ப்பினை வழங்குகின்றன என்பதை மறுக்க முடியாது. ஆனால் மலாய் மக்களின் வாழ்க்கை முறை, சேதப்படாத காடுகள், செயற்கயற்ற இயற்கையின் பேரெழில் இவற்றை ரசிக்க வேண்டுமென்றால் தாராளமாக ஒரு சில நாட்கள மலேசியாவின் இந்த வடக்கு எல்லை மானிலத்திற்குச் சென்று வரலாம்.

மலேசிய பழங்களை விரும்பி உண்பவர்கள் குறிப்பாக ரம்புத்தான் டுரியான், லங்சாட், டுக்கு போன்றவற்றை விரும்புபவர்கள் ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் இப்பகுதியில் சுற்றுலா செய்வது மிகச் சிறந்தது. மிகக் குறைந்த விலையில் இப்பழங்கள் இங்கு கிடைக்கின்றன. இங்கிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டு வரப்படுகின்றன என்பதும் ஒரு முக்கியச் செய்தி.


பெர்லிஸ் மானிலத்தில் 4 நாட்கள் எங்கள் பயணம். அது முடித்து கெடா வழியாக மீண்டும் பினாங்கு திரும்ப வேண்டும். இடையில் மலேசியாவின் மிகப் பெரிய அரிசி அருங்காட்சியகத்தையும் பார்த்து விட்டு பினாங்கிலிருக்கும் என் சகோதரியின் இல்லம் திரும்ப திட்டம். இந்த டிசம்பர் 2010 - ஜனவரி 2011 மலேசியப் பயணத்தில் பெர்லிஸ் மட்டுமன்றி மலாக்க மானிலத்திலும் சில நாட்களைக் கழிக்க வாய்ப்பமைந்தது. 15ம் நூற்றாண்டு வாக்கில் புகழ் பெற்ற மாலாயாவின் முக்கிய துறைமுக நகரமல்லவா மலாக்கா ? இதனைப் பற்றி எனது அடுத்த மலேசிய தொடர் அமையும். ஆனால் இடையில் குறைந்தது ஆறு மாதங்கள் இடைவெளி நிச்சயம் உண்டு.
மலேசியா என்றால் அது எளிமை..! அழகு..! பசுமை.. ! தோழமை..! தூய்மை..! நேசம் மிக்க மக்கள் .!


மீண்டும் சந்திப்போம் Jumpa Lagi..!


இதுவரை என்னுடன் சேர்ந்து பயணித்த உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள் (Terima Kasih!)



அன்புடன்
சுபா

2 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

உங்கள் பயணக்கட்டுரைகள் மிகுந்த சுவராசியமாக இருக்கின்றன. பொறுமையாக பழைய பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன்!

விச்சு said...

தங்களின் தளத்தினை இப்போதுதான் எட்டிப்பார்க்கிறேன். எல்லாவற்றினையும் நேரம் கிடைக்கும்போது வாசிக்கிறேன். மலேசிய உடையில் அழகு.

Post a Comment